தேர்தலில் “வெற்றி பெறாவிட்டால் பதவி பறிப்பு” ... ஸ்டாலின் பகிரங்க எச்சரிக்கை!
Dinamaalai November 07, 2025 01:48 AM

 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது. தேர்தல் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரம், நலத்திட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தொகுதி நிலவரம், கட்சி செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும், ‘ஒன்-டூ-ஒன் உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியின் போது சங்கரன்கோவில் மற்றும் நெல்லை தொகுதி திமுக நிர்வாகிகளையும் அவர் சந்தித்தார்.

அந்த சந்திப்பில், நெல்லை தொகுதியில் கட்சி வெற்றி பெறவில்லை என்றால் மாவட்டச் செயலாளர் உள்பட நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும் என ஸ்டாலின் நேரடியாக எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், SIR பணிகளில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் பெயர் நீக்கப்படும் அபாயம் இருப்பதால், வாக்காளர் விவர சேகரிப்பு பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.