இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அரசியல் பதற்றம் கிரிக்கெட்டையும் பாதித்து வரும் நிலையில், பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் ஐசிசிக்கு காட்டமான செய்தி அனுப்பியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளும் மோதல் போக்கில் இருப்பதால், வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரில் இரு போட்டிகள் ரத்து செய்யப்பட்டன;
ஆசியா கோப்பையில் மூன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்கள் நடந்தாலும், வீரர்கள் இடையே கைக்குலுக்கல் இல்லாத சம்பவமும், ஏசிசி தலைவர் மொஹ்சின் நக்வி இந்தியாவின் கோப்பையுடன் தப்பி ஓடியதும் பிரச்னையை முற்றச் செய்தன. இதனால் கிரிக்கெட்டில் அரசியல் கலப்பதை வாசிம் அக்ரம் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
விஸ்டென் கிரிக்கெட் நேர்காணலில் பேசிய அக்ரம், “மன்னிக்க பார்க்கவும், ஆனா கிரிக்கெட்டில் அரசியல் பிடிக்கல. விளையாட்டை அரசியலோடு கலக்கக் கூடாது. லீக் கிரிக்கெட்டில் எல்லா நாட்டு வீரர்களையும் எடுங்க. தைரியமா இருங்க, பெரிய மனசு காட்டுங்க.
ஐசிசியும் கிரிக்கெட் வாரியங்களும் இதுக்கு முன்னே வந்து நடவடிக்கை எடுக்கணும். லீக் யாருக்கு சொந்தம் அல்ல, டீம் யாருக்கு சொந்தம் என்பது முக்கியமில்ல… எல்லா நாட்டு வீரர்களும் விளையாடணும்” என்று தெரிவித்தார். ஐபிஎல்லில் பாகிஸ்தான் வீரர்களும், பாகிஸ்தான் லீக்குகளில் இந்திய வீரர்களும் பங்கேற வேண்டும் என்பதே அவரது விருப்பம்.