காதலை கண்டித்தவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு... கல்லூரி மாணவர் மற்றும் ரவுடி கைது!
Dinamaalai November 07, 2025 05:48 AM

 

 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பட்டானூரை சேர்ந்த கமலேஷ் (20) புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலையில் இளநிலை குற்றவியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். அவர், கோரிமேடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த தட்டாஞ்சாவடி ஞானதியாகு நகர் ஒத்தவாடை வீதியை சேர்ந்த பெயிண்டர் ரிச்சர்டும், அவரது மகன் விபிஷனும் சில மாதங்களுக்கு முன் கமலேஷை அழைத்து, அந்த பெண்ணுடன் பேச வேண்டாமென கூறி தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மனமுடைந்த கமலேஷ், சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த தனது நண்பர் சாரம் பகுதியை சேர்ந்த ரவுடி விஜய் (25) என்பவரிடம் இதை கூறினார். இருவரும் பழிவாங்கும் நோக்கில் ஞானதியாகு நகரில் உள்ள ரிச்சர்டின் வீட்டுக்கு பைக்கில் சென்று நாட்டு வெடிகுண்டை வீசினர். அது வெடிக்காததால், பெட்ரோல் குண்டை வீசினர். அது ஜன்னலில் பட்டு வெடித்து தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக ரிச்சர்டு மற்றும் அவரது குடும்பத்தினர் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை.

வெடி சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டதால் இருவரும் தப்பினர். தகவலறிந்த தன்வந்திரி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு வெடிக்காமல் கிடந்த நாட்டு வெடிகுண்டை கைப்பற்றினர். ரிச்சர்டு அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விஜய் மற்றும் கமலேஷை தேடிவந்தனர். பின்னர் இருவரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். நீதிபதி உத்தரவின்படி அவர்கள் 15 நாள் நீதிமன்ற காவலில் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.புதுச்சேரியில் காதலை கண்டித்தவரின் வீட்டில் வெடிகுண்டு வீச முயன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.