H-1b விசா ஹோல்டர்களுக்கு பொன்னான வாய்ப்பு… கனடாவில் அதிர வைக்கும் வேலை வாய்ப்பு திட்டம்… கனடா பிரதமர் அதிரடி அறிவிப்பு…!!!
SeithiSolai Tamil November 07, 2025 07:48 AM

கனடா, அமெரிக்காவின் டிரம்ப் அரசு ஏற்படுத்திய ஹெச்-1பி விசா கட்டண அதிர்ச்சியை வாய்ப்பாக மாற்றி, அந்நாட்டு திறமையாளர்களை ஈர்க்க திட்டமிடுகிறது. பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசு, 1.7 பில்லியன் கனடிய டாலர் (சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்) ஒதுக்கீடு செய்து, 1,000-க்கும் மேற்பட்ட உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்களை வரவழைக்க உள்ளது.

இது கனடாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என அரசு ஆவணம் தெரிவிக்கிறது. குறிப்பாக, ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு ‘விரைவுப் பாதை’ (Accelerated Pathway) அறிமுகப்படுத்தப்படும்;

அமெரிக்காவில் ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் விதிக்கப்படுவதால், இந்தியர்கள் உட்பட பல தொழில்நுட்ப வல்லுநர்கள் கனடாவை நோக்கி திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேநேரம், கனடா தற்காலிக குடியேற்றவாசிகளை குறைக்க முடிவு செய்துள்ளது – 2026-ல் 3.85 லட்சமும், 2027-28-ல் 3.70 லட்சமும் மட்டுமே அனுமதி. மாணவர் விசா (Study Permit) எண்ணிக்கையும் பெருமளவு குறைக்கப்படுகிறது:

2026-ல் 1.55 லட்சம், 2027-28-ல் 1.50 லட்சம். ஆனால் நிரந்தர குடியேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், 2026 முதல் 2028 வரை ஆண்டுக்கு 3.80 லட்சம் பேருக்கு அனுமதி வழங்கப்படும்.

இந்தியர்களே ஹெச்-1பி விசாவில் 70 சதவீதம் பெறுவதால், டிரம்பின் புதிய கட்டணம் கனடாவுக்கு ‘தங்க வாய்ப்பு’ என நிபுணர்கள் கருதுகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.