குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்த உடலில் நேரும் அதிசயம்
Top Tamil News November 07, 2025 09:48 AM

பொதுவாக மலையில் உள்ள மரங்களில் இருந்து சேகரிக்கப்படும் தேன் ஒரு மூலிகை யாகும் .அந்த தேனில்  மருத்துவ குணம்  இருக்கிறது .இந்த தேனை   மருந்து பொருட்களுடன் சேர்த்து கொடுக்கும்போது ஜீரண பாதையில் மருந்து உறிஞ்சப்பட்டு நம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் . மேலும்  இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் கலந்து செயல்பட ஆரம்பித்து நோய் குணமாகும் .,இந்த தேன் மூலம் நமக்கு கிடைக்கும் ஆரோக்கியம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.தேன் அடிக்கடி உண்பதால் விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்கும் ஆற்றல் வரும்  

2.மேலும் குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தலாம் ,இப்படி தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி குழந்தைக்கு  நல்ல வலிமை கிடைக்கும்.

3.மேலும் சிலருக்கு கண் நோய், தோல் நோய் இருக்கும் ,இந்த நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம். மேலும் வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசம் அடைந்து கண் நல்லா தெரியும் .

4.மேலும் இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை அருந்தலாம் .இப்படி  அருந்தினால், வாந்தி, குமட்டல்,  ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்களிடமிருந்து நிவாரணம் கிடைக்கும் .

5.மேலும் தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்துவிடும் , அது மட்டுமில்லாமல் ரத்த ஓட்டத்தை சீராக்கும். மேலும் தேன் மூலம்  இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.

6.அடுத்து தேனுடன் , முட்டை,பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயிடமிருந்து நிவாரணம் கிடைக்கும் 

7.. தினமும் ஒரு ஸ்பூன் தேன் உட்கொண்டு வந்தால் 
மூட்டுகள் வலிக்காது. தேயாது.

8.தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

9.மேலும் தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும்.

10.தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிடலாம் .இப்படி சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும் 
11.தேனும், சூடான வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.