பொதுவாக இப்போது நம் ஊரில் தெருவுக்கு தெரு தேநீர் கடை இருப்பது போல செயற்கை கருத்தரிப்பு மையங்கள் புற்றீசல் போல பெருகி விட்டது .இந்த மையங்கள் இப்படி பெறுக காரணம் இப்போது பல ஆண்களுக்கு விந்தணுக்களின் குறைபாடும் ஒரு காரணமாக கூறப்படுகிறது .இந்த விந்தணுக்கள் அதிகரிக்க என்ன உணவுவகைகளை சாப்பிடலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.பொதுவாக ஆண்களின் விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க , அவர்கள் உண்ணும் உணவு முறை முக்கிய பங்கு வகிக்கிறது .
2.மேற்கத்திய நாடுகளின் உணவு முறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பதப்பட்டுத்தப்பட்ட இறைச்சி வகைகளால், ஆண்களின் விந்து அணு எண்ணிக்கை குறைகிறதாம்
3.மேலும் கார்பனேட்டட் பானங்கள் சிலர் அதிகம் குடிப்பர் .இந்த பானங்களை அதிக அளவு குடிப்பதினால், ஆண்களின் விந்து அணுக்களின் செயல் திறன் பாதிக்கப்படுகிறதாம்
4.மேலும் சில ஆண்கள் பாலாடைக் கட்டி மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்களளை அதிக அளவு சாப்பிடுவர் .
5.இப்படி அதிகம் அந்த உணவுகளை எடுத்துக்கொள்வதால் விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாம் .
6..அந்த பால் பொருட்கள் சில அத்தியாவசிய சத்துக்ளான கால்சியம், விட்டமின் டி உள்ளிடவை அடங்கியதாக இருக்கிறது ,
7.இருந்தாலும் விந்து அணுக்களை பாதிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
8.பாஸ்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் சிலர் சோயா பொருட்களை அதிக அளவு பயன்படுத்துகின்றனர்
9.இதனால் 99 சதவிகிதம் பேருக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுவதாகத் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது