ஆசியக் கோப்பை 2025 தொடரில் இந்தியா – பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பாக, ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இது குறித்துப் பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் தன்வீர் அஹ்மத், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு 30 போட்டிகள் தடை விதிக்க வேண்டும் என்று ஆவேசமாகக் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த விவகாரத்தில், தொடர்ச்சியாக விதிகளை மீறியதற்காக பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுஃப்க்கு 2 போட்டிகள் தடை விதிக்கப்பட்ட நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்துப் பேசியதற்காக சூர்யகுமார் யாதவுக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 30% அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.
“>
இது குறித்து ஒரு பாகிஸ்தான் சேனலில் பேசிய தன்வீர் அஹ்மத், சூர்யகுமார் யாதவ், “இந்தியா – பாகிஸ்தான் ஆட்டங்கள் இனி போட்டி இல்லை, அது சமீப காலமாக ஒன்-சைடட் (ஒருதலைப்பட்சமான) கதையாகிவிட்டது” என்று கூறியதுடன், பஹல்காம் தாக்குதல் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார்.
“நான் ஐ.சி.சி.யின் தலைவராக இருந்திருந்தால், சூர்யகுமார் யாதவுக்கு 30 போட்டிகள் தடை விதித்திருப்பேன்” என்று அவர் கூறியுள்ளார். மேலும், முன்னாள் பாகிஸ்தான் வீரர் தன்வீர் அஹ்மத், ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா மீது நேரடியாகக் குற்றம் சாட்டி, “அவர்தான் ஐ.சி.சி-க்குள் அரசியல் சார்பு நிலையைக் கொண்டு வந்துவிட்டார்.
விளையாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இந்திய வீரர்கள் நடந்துகொண்டால், பாகிஸ்தான் வீரர்களுக்கு அளிப்பதைப் போல தண்டனைகள் இருப்பதில்லை. ஐ.சி.சி-யை கேலிக்கூத்தாக்கிவிட்டார்கள்” என்றும் அவர் சாடியுள்ளார்.