Stain Removal: உங்கள் ஃபேவரைட் ஆடையில் சாயமா..? நீக்கும் டிரிக்ஸ் இதுதான்..!
TV9 Tamil News November 07, 2025 02:48 AM

ஒன்றாக துணி துவைக்கும்போது ஒரு அடர் நிற துணியின் நிறம் இன்னொரு துணிக்கு (Cloths) மாறுவது பெரும்பாலும் நிகழும். இதனால், பல துணிகள் அடுத்த முறை பயன்படுத்த முடியாத சூழல் உண்டாகும். சில நேரங்களில் வாங்கி ஒரு முறை பயன்படுத்திய புதிய துணிகள் கூட இதனால் வேஸ்டாகிவிடும். பலரும் பல வகையில் பல பொருட்களை கொண்டு எவ்வளவோ முறை துவைத்து முயற்சி செய்திருப்போம். ஆனால், இது எதுவும் பலன் தராது. இந்தநிலையில், நீங்களும் தினந்தோறும் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டால் சாயம் படிந்த துணிகளை (Colour Stain) எப்படி பழைய நிலைக்கு கொண்டு வரலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

சாயம் படிந்த துணியை எப்படி பழைய நிலைக்கு கொண்டு வருவது..?

மற்ற துணிகளின் சாயம் உங்கள் பேவரைட் துணிகளில் கறைபட்டிருந்தால், தொடர்ந்து துவைப்பது உதவாது. அதற்கு பதிலாக, சாயத்தின் கறையை நீக்க சில விஷயங்களை பின்பற்றலாம். முதலில் எப்போது நீங்கள் புதிய ஆடைகளை வாங்கும்போது, அவற்றை சிறிது நேரம் உப்பு நீரில் ஊற வைக்க வேண்டும். நீங்கள் பச்சை துணிகளை துவைக்கும் போதெல்லாம், பச்சை நிறம் தொடர்ந்து கசிந்து கொண்டே இருக்கும். இதனை மற்ற வெளிர் நிற ஆடைகளை அவற்றுடன் நனைக்கும்போது பிரச்சனையாக மாறும்.

ALSO READ: தண்ணீர் பாட்டில் மூடியின் நிறங்களில் இவ்வளவு ரகசியமா? இவற்றின் அர்த்தம் என்ன?

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடா அதன் சமையல் பயன்பாட்டிற்கு நன்கு அறியப்பட்டதாகும். அதேநேரத்தில், சாயம் படிந்த ஆடைகளிலிருந்து கறைகளை அகற்றுவதற்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இது ஒரு எளிய தீர்வாகும்.

இதை எப்படி உபயோகிப்பது..?

துணிகளில் இருந்து சாயத்தை அகற்ற ஒரு லிட்டர் தண்ணீரில் ஒன்று அல்லது 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சமையல் சோடாவை நன்கு கலக்கவும். பின்னர், துணிகளை குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் கரைசலில் ஊற வைக்கவும். கறையை மெதுவாக தேய்த்தால் பொதுவாக கறைகள் நீங்கும்.

ALSO READ: ஒரே பிராவை எத்தனை முறை அணிவது சரி..? எந்த தவறு பிரச்சனையை தரும்..?

ஆல்கஹால்:

துணிகளில் உள்ள வண்ண கறைகளை நீக்க ஆல்கஹால் பயன்படுத்தலாம். இது ஆடைகளில் இருந்து வண்ணத்தை போக்க பெரிதும் உதவி செய்யும். அதன்படி, கறையின் மீது ஒன்று அல்லது 2 டீஸ்பூன் ஆல்கஹால் தடவவும். சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு, இதை ஒரு பிரஷ் மூலம் லேசாக தேய்க்கவும். இது எளிதாக கறையை நீக்கும். பின்னர், துணிகளை சுத்தமான தண்ணீரில் துவைத்து நன்றாக உலர வைக்கவும். இதனை தொடர்ந்து, ஆடையை வெயிலில் உலர்த்துவது வெயிலில் காய வைக்கலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.