பிக்பாஸ் கொடுத்த சீக்ரெட் டாஸ்கை சிறப்பாக செய்த சாண்ட்ரா… கண்ணீர் விட்ட விக்கல்ஸ் விக்ரம்
TV9 Tamil News November 07, 2025 01:48 AM

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தற்போது 4 வாரங்கள் முடிவடைந்து 5-வது வரம் சென்றுகொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது வரை 5 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மேலும் கடந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் 4 போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் போட்டியாளர்களாக பிக்ப்ஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். வைல்கார்ட் போட்டியாளர்கள் உள்ளே நுழைந்த உடனே பிக்பாஸ் வீட்டில் ஆட்டம் மாறத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு ஹோட்டல் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பிக்பாஸ் வீடு இந்த வாரம் ஆஹா ஓஹோ ஹோட்டலாக மாறியுள்ளது. மேலும் வீட்டில் உள்ள 19 போட்டியாளர்களும் ஹோட்டல் ஊழியர்களாக டாஸ்க் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளனர். ஒவ்வொரு சீசனிலும் வீட்டில் உள்ள போட்டியாளர்களே ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் விருந்தினர் என மாறி மாறி போட்டியில் கலந்துகொள்வார்கள்.

ஆனால் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த போட்டியாளர்களுக்கும் ஹோட்டல் ஊழியர்களாக மாற பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களின் போட்டியாளர்களான பிரியங்கா, மஞ்சரி மற்றும் தீபக் ஆகிய மூன்று பேரும் ஹோட்டலுக்கு விருந்தினர்களாக வந்துள்ளனர். இவர்களிடம் இருந்து அதிக ஸ்டார்களை பெறும் நபர்களுக்கு எவிக்‌ஷன் ஃப்ரி பாஸ் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் கொடுத்த சீக்ரெட் டாஸ்கை சிறப்பாக செய்த சாண்ட்ரா:

இந்த நிலையில் நேற்றையை எபிசோடில் பிக்பாஸ் சாண்ட்ராவை அழைத்து ஒரு சீக்ரெட் டாஸ்கை வழங்கினார். அப்படி பிக்பாஸ் சொன்னது போல சாண்ட்ரா அந்த சீக்ரெட் டாஸ்கை செய்து முடித்தால் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைக்கும். மேலும் ஒரு போட்டியாளரை நேரடியாக நாமினேட் செய்யும் பவரும் வழங்கப்படும்.

இதனைத் தொடர்ந்து சாண்ட்ரா பிக்பாஸ் கொடுத்த டாஸ்கை சிறப்பாக செய்து முடித்துள்ளார். தொடர்ந்து இந்த டாஸ்கால் பாதிக்கப்பட்ட விக்கல்ஸ் விக்ரம் அழும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… ஊதித் தள்ள நான் ஒன்னும் மண்ணு இல்லை… மலை – வெளியானது துல்கர் சல்மானின் காந்தா பட ட்ரெய்லர்!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

#Day32 #Promo3 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/0xrZAp2UD3

— Vijay Television (@vijaytelevision)

Also Read… ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தை நிராகரித்த பிரபல நடிகர்? வைரலாகும் தகவல்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.