கோலிவுட் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்தும் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth). இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இறுதியாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படம் ரசிகரக்ளிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் இந்தப் படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் குறித்த தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் சமீபத்தில் இந்த ஜெயிலர் 2 படத்தின் கோவா ஷெடியூல் முடிவடைந்ததாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவத்தை ஈர்த்தது. மேலும் அடுத்தடுத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இந்த ஜெயிலர் 2 படம் வருகின்ற 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ரஜினிகாந்தின் படத்தில் நடிக்க மறுத்த பாலையா?இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலர் கேமியோ ரோலில் நடித்து இருந்தனர். அதே போல இந்த இரண்டாம் பாகத்திலும் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து மற்ற மொழிகளில் இருந்து முன்னணி நடிகர்கள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நந்தமுரி பாலகிரிஷ்ணா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்த நிலையில் தற்போது அவர் நடிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்ததாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவித்துள்ளது.
Also Read… சிகிரி என்றால் என்ன? இணையத்தில் கவனம் பெறும் ஏ.ஆர்.ரகுமான் போஸ்ட்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:#Balakrishna Rejected Two Films 🚫🎥
1. #AndhraKingTaluka
The character that Upendra eventually played was originally offered to Balakrishna.
Due to certain reasons, Balakrishna did not take up the role, and the makers later cast #Upendra for that character.
2. #Jailer… pic.twitter.com/ynTezTjJ6i
— Movie Tamil (@_MovieTamil)
Also Read… தனுஷ் ரசிகர்களுக்கு D 54 படக்குழு வைத்த கோரிக்கை – என்ன தெரியுமா?