இன்னமும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. பிலிப்பைன்ஸ் நாட்டை மொத்தமாக புரட்டிப் போட்டிருக்கிறது கல்மேகி. ஆம்.. பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியை கல்மேகி சூறாவளி கடுமையாக தாக்கி, உருகுலைய வைத்திருக்கிறது.
சிபு உள்ளிட்ட பல மாகாண நகரங்களில் புயல் பலத்த காற்றும், மழையும் கொட்டியதால் பரவலான சேதம் ஏற்பட்டது. கார்களும், வீடுகளும், கப்பல் கன்டெய்னர்களும் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டன. லிலோன் நகரில் மட்டும் 35 உடல்கள் மீட்கப்பட்டன.

புயல் தாக்கிய பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் சாலை, மின் மற்றும் தொலைதொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. நிலைமை மோசமடைந்ததால், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினண்ட் மார்கோஸ், இதை தேசிய பேரிடராக அறிவித்துள்ளார். இதன் மூலம் நிவாரண நிதி ஒதுக்கவும், அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க முடியும்.

முன்னெச்சரிக்கையாக 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். சிபு மற்றும் நீக்ரோஸ் தீவுகளை தாக்கிய புயல் பின்னர் கடலுக்குத் திரும்பியது. கடந்த சில நாட்களாக நீடித்த புயல் தாக்குதலால் இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க