Shubman Gill: தொடர்ந்து சொதப்பும் சுப்மன் கில்.. இந்திய அணியில் வெளியேற்றப்படுவாரா?
TV9 Tamil News November 07, 2025 04:48 PM

இந்திய அணியின் (Indian Cricket Team) ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஒரு நம்பமுடியாத திறமையான பேட்ஸ்மேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், கில் தற்போது கடினமான சூழ்நிலையில் தத்தளித்து வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் டி20 போட்டிகளை பொறுத்தவரை அரைசதம் அடிக்கத் தவறி வருகிறார், குறிப்பாக, டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, ​சுப்மன் கில் (Shubman Gill) தொடர்ந்து 7வது முறையாக அரைசதம் அடிக்கத் தவறிவிட்டார். மேலும், கடந்த சில போட்டியையும் சேர்த்தால், கில் 14 இன்னிங்ஸ்களில் அரைசதம் கூட எட்டவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில், சுப்மன் கில் செய்த ஒரு விஷயம் பரவலான விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.

ALSO READ:3 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்.. இந்திய அணியில் இல்லாத இடம்.. ஷமியை தண்டிக்கிறதா பிசிசிஐ?

சுப்மன் கில்லின் மெதுவான இன்னிங்ஸ்:

கராரா ஓவலில் நேற்று அதாவது 2025 நவம்பர் 6ம் தேதி நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது டி20 போட்டியில் சுப்மன் கில்லின் மெதுவான இன்னிங்ஸை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தப் போட்டியில் கில் அதிகபட்சமாக 39 பந்துகளை எதிர்கொண்டு 46 ரன்கள் எடுத்தார். இதன்போது, அவரது ஸ்ட்ரைக் ரேட் வெறும் 117.95 மட்டுமே. மேலும், தனது இன்னிங்ஸில் 11 டாட் பால்களை எதிர்கொண்டார். அதாவது கிட்டத்தட்ட இரண்டு ஓவர்கள் கில் ஸ்கோர் செய்யவே இல்லை. இதன் விளைவாக, அவரது ஸ்ட்ரைக் ரேட் குறைந்து, மற்ற இந்திய அணி வீரர்கள் மீது அழுத்தம் அதிகரித்தது.

சர்வதேச டி20 அணியில் இடம் குறித்த கேள்வி

Ravi Shastri – “Shubman Gill was never made for T20Is.” pic.twitter.com/6DmLu27rX6

— 𝐉𝐨𝐝 𝐈𝐧𝐬𝐚𝐧𝐞 (@jod_insane)


இந்திய டி20 அணியில் சுப்மன் கில்லின் இடம் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது. முன்னதாக, கில் இல்லாத நேரத்தில் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், இந்திய அணி கில்லை துணை கேப்டனாக நியமித்தது. மேலும், இந்திய அணிக்காக இன்னிங்ஸைத் தொடங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுமட்டுமின்றி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20 சர்வதேச போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 160க்கு மேல் உள்ளது, ஆனால், ஜெய்ஸ்வாலுக்கு டி20 போட்டிகளில் இடம் கிடைக்கவில்லை.

ALSO READ: ஆஸ்திரேலியாவை அசால்ட்டாக தோற்கடித்த இந்திய அணி.. 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இதுமட்டுமின்றி நடந்து முடிந்த 2025 ஆசிய கோப்பைக்கான டி20க்கான இந்திய அணியில் கில் சேர்க்கப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை கில் அரை சதம் அடிக்க திணறி வருகிறார். சுப்மன் கில் கடந்த 11 டி20 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அவரது சிறந்த ஸ்கோர் 47 ஆகும். கில் மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது என்பது தெளிவாகிறது. இதையடுத்து, கில் விரைவில் டி20யில் பெரிய அல்லது அதிரடியான இன்னிங்ஸை விளையாடவில்லை என்றால், அணியில் இருந்து வெளியேற்றப்படலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.