இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் முழுவதும் பெரும்பாலும் சரிவை கண்ட நிலையில், இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 540 புள்ளிகள் சரிந்து 82,760 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 160 புள்ளிகள் சரிந்து 25,399 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப், ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா போன்ற ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும், நிஃப்டியில் உள்ள மற்ற அனைத்து பங்குகளும் சரிவில்தான் வர்த்தகமாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை சரிந்தாலும், அடுத்த வாரம் முதல் நாளில் பங்குச்சந்தை உயர அதிக வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Edited by Siva