மக்களை ஏமாற்றுவதற்காக தவறாக எனது புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளனர்.. பிரேசில் மாடல் விளக்கம்!
TV9 Tamil News November 07, 2025 10:48 PM

பிரேசிலியா, நவம்பர் 07 : இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் தேர்தல்களில் மிகப்பெரிய அளவிலான மோசடிகள் நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதுமட்டுமன்றி, இந்த மோசடிகள் தொடர்பான ஆதரங்களை சேமித்து அவர் அவற்றை பொதுவெளிகளில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அரியானாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வாக்கு திருட்டி மோசடி நடைபெற்று இருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தேர்தல் மோசடி – ஆதாரத்துடன் நிரூபித்த ராகுல் காந்தி

நவம்பர் 05, 2025 அன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ஹெச் ஃபைல்ஸ் (H Files) என்ற பெயரில் பல்வேறு ஆதாரங்களுடன் ராகுல் காந்தி சில தகவல்களை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், அரியானா வாக்காளர் பட்டியலில் சுமார் 25,41,144 போலி வாக்காளர்கள் உள்ளனர். தவறான வாக்காளர்கள், போலி முகவரிகள், கும்பல் வாக்காளர்கள் என பல்வேறு வகையான மோசடிகள் அந்த தேர்தலில் முறைகேடுகள் நிறைந்து இருப்பதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதையும் படிங்க : அமெரிக்காவில் விபத்துக்குள்ளான சரக்கு விமானம்.. 3 பேர் உயிரிழந்த சோகம்

வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற பிரேசில் மாடல்

ராகுல் காந்தி விளக்கம் அளித்த அந்த மோசடிகள் தொடர்பான தரவுகளில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை அவர் குறிப்பிட்டு காட்டினார். அந்த பெண் பிரேசிலை சேர்ந்த ஒரு மாடல் என்றும் அரியானா தேர்தலின் போது ராய் சட்டசபை தொகுதியில் 10 வாக்குச்சாவடிகளில் 22 முறை அந்த பெண்ணின் பெயரில் வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். ஸ்வீட்டி, சரஸ்வதி என பல்வேறு பெயர்களில் அந்த பெண் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அவர் தனது குற்றச்சாட்டை முன் வைத்தார். ராகுல் காந்தியின் இந்த வீடியோ வைரலானதை தொடந்து அந்த பிரேசில் மாடல் அது குறித்து விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிங்க : ரஷ்யாவை அடுத்து அடுத்து உலுக்கிய கடுமையான நிலநடுக்கம்.. பீதியில் பொதுமக்கள்!

பிரேசில் மாடல் வெளியிட்ட வீடியோ

🚨BIG BREAKING

The Brazilian model whose picture the Election Commission used to create 22 fake voters in Haryana has finally reacted to it.

She is shocked to know that Gyanesh Kumar is using pictures of “Mataye” & “Behne” of Brazil to help the BJP in Vote Chori. pic.twitter.com/7Nmyx3qBy1

— Mohit Chauhan (@mohitlaws)

தனது புகைப்படம் தவறாக பயன்படுத்தப்பட்டது குறித்து அந்த பெண் மிகுந்த கோபத்தில் பேசியுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் இருப்பது தான் தான் என்றும் அதற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தான் 18 அல்லது 20 வயதில் எடுத்த புகைப்படத்தை மக்களை ஏமாற்றுவதற்காக தவறாக பயன்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.