மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா முன்வைத்த குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் புதிய திருப்பம் எடுக்கின்றன. தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி ஜாய் கிரிசில்டா, ரங்கராஜ் அனுப்பியதாக கூறப்படும் வீடியோக்கள் மற்றும் மெசேஜ்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார். இதேசமயம், ரங்கராஜ் தனது அறிக்கையில் “ஜாய் தன்னை மிரட்டி கல்யாணம் செய்துகொண்டார்” என கூறியிருந்தார். அதற்கு பதிலாக, “மிரட்டி கல்யாணம் பண்ணுவதற்கு அவர் என்ன குழந்தையா?” என கேட்டு, அவருடைய பழைய வீடியோ ஒன்றையும் ஜாய் வெளியிட்டார்.
இதனால் சர்ச்சை மேலும் பரபரப்பாக மாறிய நிலையில், நேற்று ரங்கராஜின் மனைவி ஸ்ருதி தனது அறிக்கையை வெளியிட்டார். அதில், “ஜாய் கிரிசில்டா ஒழுக்கமற்ற, அவமதிப்பான செய்திகளை அனுப்பி எங்கள் குடும்ப அமைதியை குலைக்க முயல்கிறார். அவர் ஊடகங்களை தனிப்பட்ட லாபத்திற்காக தவறாக பயன்படுத்துகிறார்” என கூறினார். மேலும், “ஜாய் தானே எழுதிய கடிதத்தில் என் கணவர் ரங்கராஜிடம் பணம் கேட்டு, அவரை தனது மனைவியாக சமூகத்தில் அறிமுகப்படுத்துமாறு கேட்டுள்ளார். அவருடைய நோக்கம் பணம் பறிப்பும் எங்கள் குடும்பத்தை பிரிப்பதும்தான்” என குற்றஞ்சாட்டினார்.

இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக, ஜாய் கிரிசில்டா தன்னிடம் உள்ள ஆதாரங்களை மீண்டும் வெளியிட்டுள்ளார். ரங்கராஜ் தன்னிடம் அனுப்பிய மெசேஜ் ஸ்கிரீன்ஷாட்களைப் பகிர்ந்த அவர், “இவரு வருவாராம் கல்யாணம் பண்ணுவாராம் குழந்தை குடுப்பாராம், அப்புறம் ஓடி போவாராம். பெண்களின் வாழ்க்கையை அழிக்கிறவர்களை யார் பாதுகாக்கப் போகிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “உருகி உருகி லவ் பண்ணிட்டு பிளாக்மெயில் என்று சொல்றது எப்படி?” என ரங்கராஜை டேக் செய்து பதிவு வெளியிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!