திரைப்படங்களில் இருந்து ஓய்வெடுத்ததாக நடிகரும் கார் ரேசருமான அஜித் குமார் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அளித்த பேட்டியில் அவர் பல முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

உலகம் முழுவதும் நடைபெறும் கார் ரேசிங் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்த ஆண்டில் திரைப்படங்களில் இருந்து ஓய்வு எடுத்தேன். அதற்காகத்தான் துபாய்க்கு வந்துள்ளேன். அனைத்து விதமான இரைச்சல்களிலிருந்தும் விலகி இருக்க விரும்புகிறேன். தேவையற்ற கவன ஈர்ப்புகளிலிருந்து தப்பி, என்னை ஊக்கப்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன் என்று அஜித் கூறினார்.
மேலும், பெரும்பாலான முக்கியமான ரேசிங் சுற்றுகள் துபாயில் அமைந்துள்ளதால், இங்கு இருப்பது எனது ரேசிங் பயிற்சி மற்றும் போட்டி முன்னேற்பாடுகளுக்கு உதவியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!