பகீர் வீடியோ... நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த சொகுசு கார் !
Dinamaalai November 08, 2025 05:48 AM

தலைநகர் டெல்லியின் கோவிந்தபுரி அருகே இன்று மாலை 5.30 மணியளவில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது. சாலையில் சென்றுக்கொண்டிருந்த சொகுசு காரில் 38 வயதான பெண் ஒருவர் தனது 5 வயது மகனுடன் பயணம் செய்துகொண்டிருந்தார். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சிக்னலில் கார் நின்றபோது திடீரென காரில் தீப்பற்றியது.

View this post on Instagram

A post shared by Karunadu_updates_ (@karunadu_updates_)

இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, காரில் சிக்கிய பெண்ணையும், அவரது மகனையும் பத்திரமாக வெளியேற்றினர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த காரை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கார் முழுமையாக கருகி சேதமடைந்தது. அதேசமயம், அதிர்ஷ்டவசமாக கார் ஓட்டிய பெண்ணும், அவரது மகனும் உயிர் பிழைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தீப்பற்றிய காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.