ஆசியாவின் இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஜகார்த்தா நகரம் கலபா கார்டிங் பகுதியில் உள்ள மசூதியில் இன்று குண்டுவெடிப்பு ஏற்பட்டது. அந்த மசூதியில் ஏராளமான மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென வெடித்த குண்டின் தாக்கத்தில் மசூதியும் அதனுடன் இணைந்த மதப்பள்ளியும் சேதமடைந்தன. இந்த வெடிப்பில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட 54 பேர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெடிப்பின் காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!