தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் அன்போடு உலகநாயகன் என அழைக்கப்பட்டு வருபவர் கமல்ஹாசன் (Kamal Haasan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சினிமாவில் இவர் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார். தனது சிறு வயது முதல் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய இவர், தற்போது தனது 71வது வயது வரையிலும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக தக் லைஃப் (Thug Life) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தின் கதையை கமல் எழுதியிருந்த நிலையில், மணிரத்னம் (Mani ratnam) இயக்கியிருந்தார். கடந்த 2025 ஜூன் மாதத்தில் வெளியான இப்படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் தோல்வியடைந்தது. மேலும் இவர் ரஜினிகாந்த் (Rajinikanth) மற்றும் சுந்தர் சி கூட்டணியில் உருவாகவுள்ளதலைவர்173 (Thalaivar173) படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, அவரும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
அந்தவகையில், பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படம்தான் KH237. இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தில் யாரெல்லாம் பணியாற்றுகிறார் என்பது தொடர்பான அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பிக் சர்ப்ரைஸ்!
Welcome to the world of Kamal Haasan#KamalHaasan #KHAA#HBDKamalHaasan#ActioninAction
A Film By @anbariv@ikamalhaasan #Mahendran
Music Composer – @jakes_bejoy
DOP – #SunilKS
Editor – #ShemeerKM
Production Designer – #VineshBanglan
Publicity Designer – @tuneyjohn… pic.twitter.com/t35EB21Qzx— Raaj Kamal Films International (@RKFI)
கமல்ஹாசனின் இந்த புதிய படத்தை அவரின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர்கள் அன்பரீவ் இயக்க, ஒளிப்பதிவு சுனில் கேஎஸ், எடிட்டர் ஷமீர் கே.எம் போன்ற பிரபலங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
இதையும் படிங்க: என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்திருக்கிறேன்.. எனது பேட்டிகளை தவறாக சித்தரிப்பாதை நிறுத்துங்கள்- அஜித் குமார்!
இந்த படத்திற்கு லோகா திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்தான் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வேறு எந்த நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள் தொடர்பான அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என ஏதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசனின் புதிய படங்கள் :இந்த KH237 திரைப்படத்தை அடுத்ததாக கமல்ஹாசன் மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளாராம். இவர் மற்றும் ரஜினிகாந்தின் கூட்டணி படம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படமானது வரும் 2027ம் ஆண்டில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்குவதற்கு அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.