Baby Care: குழந்தைகளை ஏசி அறையில் தூங்க வைக்கிறீர்களா..? டாக்டர் ஹரிணி ஸ்ரீ சொல்லும் டிப்ஸ்!
TV9 Tamil News November 08, 2025 01:48 AM

கோடைக்காலமாக இருந்தாலும் சரி, மழைக்காலமாக இருந்தாலும் சரி பெரும்பாலான மக்களுக்கு ஏசி இல்லாமல் இருக்க முடியாது. ஏசியிலிருந்து (Air Conditioner) வரும் காற்று, சுட்டெரிக்கும் வெயில் மற்றும் வெட்கையில் இருந்து குளிர்ச்சியான உணர்வை தருகிறது. இருப்பினும், இதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தவறாக பயன்படுத்தினால், இது சில நேரங்களில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் உங்கள் வீட்டிலும் சிறு குழந்தைகள் இருந்தால் ஏசியில் தூங்க வைப்பதற்கு முன்பு சில விஷயங்களை தெரிந்து கொள்வது முக்கியம். குழந்தைகளின் (Childrens Health) நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும். எனவே, குழந்தைகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க ஏசியின் வெப்பநிலை முதல் அறை வெப்பநிலை வரை குழந்தைகளுக்கு ஏற்ப சில விஷயங்களை மாற்றுவது ஏன் முக்கியம் என்பது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் ஹரிணி ஸ்ரீ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏசி அறையில் குழந்தையை தூங்க வைக்கும்முன் செய்ய வேண்டிய விஷயம்:

View this post on Instagram

A post shared by Dr C M Harini Sree(MD Paed.,FNNF(Neo)) (@dr_harini_sree_paediatrician)

நேரடியாக தூங்க வைக்கக்கூடாது:

குழந்தைகளை குளிர்சாதன வசதி கொண்ட அறையில் தூங்க வைத்தால், ஏசியிலிருந்து வரும் காற்று நேரடியாக உங்கள் குழந்தைகள் மீது படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், ஏசியின் கதவுகள் மேல்நோக்கி பார்த்திருக்குமாறு வைத்திருக்க வேண்டும்.

அறை வெப்பநிலை:

உங்கள் குழந்தையை ஏசி அறையில் தூங்க வைக்க முயற்சித்தால், வெப்பநிலையை 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை அமைக்க வேண்டும். இந்த வெப்பநிலை வெட்கையிலிருந்து நிவாரணம் அளிக்கும். மேலும், சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அபாயத்தைக் குறைக்கிறது. 18 போன்ற குறைந்த வெப்பநிலை அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தி குழந்தையின் ஆரோக்கியத்தை கெடுக்கும்.

நீரேற்றம்:

குழந்தைகள் நீண்ட நேரம் ஏசியில் இருக்கும்போது, அவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படலாம். எனவே, குழந்தைகள் நன்கு நீர்ச்சத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க, அவ்வப்போது உங்கள் குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்.

ஏசி சுத்தம்:

ஏசியைப் பயன்படுத்தும்போது, ​​அதன் தூய்மையை நாம் பெரும்பாலும் கவனிக்க தவறுகிறோம். அதன்படி, ஏசியின் பில்டரை அடிக்கடி தவறாமல் சுத்தம் செய்வது முக்கியம். அதை அழுக்காக விட்டுவிடுவது பாக்டீரியா மற்றும் தூசி உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

சரியான ஆடைகள்:

உங்கள் குழந்தைகளை ஏசி அறைக்குள் இருந்தால். அவர்களுக்கு சரியான உடை அணிவது முக்கியமானது. ஏசி அறையில் வைக்கும்போது உங்கள் குழந்தைகளுக்கு பருத்தி ஆடை அணிவது பாதுகாப்பானது. மேலும் இந்த ஆடைகள் எடை குறைவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சரியான அறை வெப்பநிலை:

உங்கள் குழந்தைகளுக்கு சளி, உடலில் சிவத்தல் மற்றும் அதிகமாக வியர்த்தல் போன்றவைகளுக்கு ஏற்ப அறையின் ஏசி குளிர்ச்சி நிலையை மாற்றுவது முக்கியம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.