ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் வேட்டி, சேலைகள் வழங்குவது வழக்கம். இந்நிலையில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அமைச்சர் காந்தி பேசும்போது, டிசம்பர் 5ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்றும், முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைப்பார்.
அதன் பின், தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வேட்டி, சேலைகள் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், பொங்கல் பரிசாக வழங்கப்படும் பச்சரிசி, வெல்லம், கரும்பு, பரிசுத் தொகை உள்ளிட்டவை வழங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.