இதற்கிடையே, இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள போவதாக செய்தி பரவியது. இருப்பினும் இதுகுறித்து இவர்கள் இருவரின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இவர்கள் இருவருக்கும் திருமணம் எப்போது? என்று தொடர்ந்து கேள்வி எழுந்து வந்தது. இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் திடீரென நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
ஆனாலும், நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் இந்த நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு பிப். மாதம் 26ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தானின் உதய்பூரில் இவர்கள் திருமணம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.