ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜநகரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை, மாணவனின் தந்தை அவரை பள்ளி விடுதியில் சேர்த்திருந்தார். ஆனால், தான்விடுதியில் தங்க விரும்பவில்லை என்றும், வீட்டிலிருந்து பள்ளிக்கு வரவே விரும்புவதாக மாணவன் கூறியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை பொருட்படுத்தாமல் தந்தை அவரை விடுதியில் சேர்த்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!