உலகம் முழுவதும் மனித ஆயுளை நீட்டிக்கும் முயற்சிகள் அலைபாய்ந்து கொண்டிருக்கும் நிலையில், சீனாவைச் சேர்ந்த Lonvi Biosciences நிறுவனம் நடத்திய புதிய ஆய்வு மிகப்பெரிய சர்ச்சையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. மனிதர்களின் அயுள் 150 ஆண்டுகளாக நீளலாம் – என்ற அதிர்ச்சி கூற்றை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளதால், ஆராய்ச்சி உலகத்தில் பெரிய விவாதம் எழுந்துள்ளது.
மனிதன் 150 வயது வாழ்வது உண்மையா?மனிதர்களின் இயல்பான அதிகபட்ச ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என விஞ்ஞானிகள் கூறினாலும், நிஜத்தில் சராசரி ஆயுள் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக கொரோனா பிந்திய காலத்தில் இளம் வயது மரணங்கள் கூட அதிகரித்துள்ளன.
ஆனால் இதை முறியடிக்க புதிய வழியை கண்டுபிடித்ததாக சீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
திராட்சை விதை சாறிலிருந்து தயாரான அதிசய மாத்திரைLonvi Biosciences நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த Anti-Ageing மாத்திரை திராட்சை விதை சாறை அடிப்படையாக கொண்டது. இந்த மருந்து உடலில் உள்ள:
ஆரோக்கியமான செல்களை பாதுகாக்கிறது,
வயதாகும் செல்களை அழிக்கிறது,
இதன்மூலம் செனெசென்ட் செல்கள் (Senescent Cells) எனப்படும் முதுமை செல்கள் குறைகின்றன.
இதன் பலனாக, முதுமை தாமதமடைந்து, ஆயுட்காலம் மேலும் கூடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
முயல், எலி பரிசோதனையில் அதிர்ச்சி முடிவுஇந்த மாத்திரை முதலில் எலிகளுக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. எலிகளின்:
உடல் நலம் மேம்பட்டது,
முதுமை அறிகுறிகள் குறைந்தன,
ஆயுள் நீண்டது.
இதன் பின்னரே மனிதர்களில் பயன்படுத்தக் கூடிய நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
150 ஆண்டுகள் வாழ்வது சாத்தியமா? — நிறுவனத்தின் பந்து வீச்சுLonvi Biosciences வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,“சரியான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, மருத்துவ பராமரிப்புடன் சேர்ந்து இந்த மருந்தை எடுத்தால், மனிதர்கள் 150 வயது வரை வாழ முடியும்.”
என்று துல்லியமாக குறிப்பிட்டுள்ளது.
ஆனால்… இது உறுதி செய்யப்பட்ட முடிவா?மருந்து இன்னும் ஆரம்பகட்ட பரிசோதனை நிலையில்தான் உள்ளது.
மனிதர்களில் அதிகாரப்பூர்வமாக பரிசோதனை தொடங்கப்படவில்லை.
மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கையாக கூறுகின்றனர்:
“150 ஆண்டுகள் ஆயுள் என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட முடிவு அல்ல.”
இது ஒரு ஆராய்ச்சி நிலை நம்பிக்கை மட்டுமே.
மனிதர்களுக்கு பாதுகாப்பாக இருக்குமா?
நீண்டகால விளைவுகள் என்ன?
உண்மையில் ஆயுள் நீளுமா?
என்பது அனைத்தும் இன்னும் தெளிவாக இல்லை.
உலகம் கவனமாகக் கவனிக்கும் ஆய்வுஇது வெறும் மாத்திரை கண்டுபிடிப்பு அல்ல…முதுமை எதிர்ப்பு மருத்துவ துறையில் ஒரு வரலாற்றுச் சம்பவமாக உலக நாடுகள் இந்த ஆய்வை கவனித்து வருகின்றன.
இந்த மருந்து உண்மையில் மனிதர்களின் ஆயுளை 150 ஆண்டுகள் வரை நீட்டித்தால்,
மருத்துவ உலகம் மட்டுமல்ல, மனித வாழ்க்கையே மாற்றமடையும்.
இந்த ஆய்வு குறித்த மேலும் அப்டேட்கள் வெளிவந்தவுடன் உடனே செய்தி வடிவில் தெரிவிக்கிறேன்.