தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான தை பொங்கல், சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் நாளாக வருடம் தோறும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூரில் பணியாற்றுபவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி உறவினர்களுடன் விழாவைக் கொண்டாடுவது வழக்கம். இதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி வருகிறது.
அதிமுக ஆட்சியில் 2021ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக ₹2,500 ரொக்கமும், அரிசி, சக்கரை, கரும்பு, வேட்டி, சேலையும் வழங்கப்பட்டது. பின்னர் 2022ஆம் ஆண்டு திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின் 20 பொருட்கள் கொண்ட பரிசுத் தொகுப்பை வழங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ₹1,000 பணத்துடன் அடிப்படை பொருட்களும் சேர்த்துத் தரப்பட்டது. ஆனால் 2025ஆம் ஆண்டு நிதி பற்றாக்குறையால் பணம் வழங்கப்படாமல், பொருட்களே மட்டுமே வழங்கப்பட்டன.

இந்நிலையில், வரும் 2026 பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ₹5,000 வழங்க அரசில் ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும், அரசு அதிகாரிகள் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர். ஒரு குடும்பத்துக்கு ₹5,000 வழங்க வேண்டுமானால் சுமார் ₹12,000 கோடி நிதி தேவைப்படும் என்பதால், நடைமுறை சாத்தியம் குறித்து சந்தேகம் நிலவுகிறது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ₹1,000 அல்லது ₹2,500 வழங்கும் வாய்ப்பு அதிகம் எனவும், இதற்கான இறுதி முடிவு டிசம்பர் மாதத்தில் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!