விலை அதிரடி! தங்கம் மீண்டும் ஏற்றப்பாதையில்... ! வெள்ளியும் புதிய உச்சம்...!
Seithipunal Tamil November 13, 2025 08:48 PM

தங்க விலை மீண்டும் ரோலர் கோஸ்டர் பயணத்தில்! கடந்த வாரம் வரை சற்று சரிவாக இருந்த தங்கம், கடந்த 10ஆம் தேதியிலிருந்து மீண்டும் துள்ளிக் குதிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த 10, 11ஆம் தேதிகளில் மட்டும் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.400 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.3,200 உயர்ந்தது. அதன் பிறகு, நேற்று முன்தினம் ஒரே நாளில் ஒரு சவரன் ரூ.1,760 உயர்ந்து, தங்க விலை ரூ.93,600 என்ற உச்சத்தை தொட்டது.ஆனால் நேற்று சிறிய சரிவு பதிவு செய்யப்பட்டது.

ஒரு கிராமுக்கு ரூ.100 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து, விலை ரூ.92,800 ஆக இறங்கியது.இந்நிலையில், இன்று தங்கம் மீண்டும் அதிரடியாக பாய்ந்துள்ளது!
ஒரு கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.11,800 ஆகவும்,
ஒரு சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.94,400 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது.
வெள்ளி விலையும் பின்தங்கவில்லை!
ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.182 ஆகவும்,
ஒரு கிலோவுக்கு ரூ.9,000 உயர்ந்து ரூ.1,82,000 ஆகவும் விலை பாய்ந்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களின் தங்க விலை நிலவரம் (22 காரட்)
12.11.2025 – ரூ.92,800
11.11.2025 – ரூ.93,600
10.11.2025 – ரூ.91,840
09.11.2025 – ரூ.90,400
08.11.2025 – ரூ.90,400
கடந்த நாட்களின் வெள்ளி விலை நிலவரம்
12.11.2025 – ரூ.173 (ஒரு கிராம்)
11.11.2025 – ரூ.170
10.11.2025 – ரூ.169
09.11.2025 – ரூ.165

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.