இன்று ஒரே நாளில் தங்கம் விலை இரண்டாவது முறையாக உயர்ந்ததால் நகை விரும்பிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் 17-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்ச நிலையை எட்டிய தங்கம், பின்னர் தொடர்ந்து குறைந்து கடந்த 4-ஆம் தேதி ரூ.90,000 வரை சரிந்தது. அதன்பின், கடந்த சில நாட்களாக விலை ஏற்றத்தாழ்வுடன் இருந்தது.
ஆனால், கடந்த 10ம் தேதி முதல் தங்க விலை மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியது. 10, 11-ஆம் தேதிகளில் மட்டும் சவரனுக்கு ரூ.3,200 உயர்வு பதிவாகியது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் ரூ.92,800-க்கும் விற்பனையானது.

இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, சவரனுக்கு ரூ.1,600 உயர்வுடன் ரூ.94,400-க்கும் விற்பனையாகியது. ஆனால், அதிலிருந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு பிற்பகலில் மீண்டும் விலை உயர்ந்தது.
தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.800 கூடிவிட்டதால், ஒரு சவரன் ரூ.95,200, கிராமுக்கு ரூ.11,900 என விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2,400 வரை அதிகரித்துள்ளது.
அதே சமயம், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. காலை ஒரு கிராம் ரூ.182 என்ற நிலையில் இருந்தது; பிற்பகலில் ரூ.1 உயர்ந்து ரூ.183 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் என விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை திடீரென உயர்வதற்கான முக்கிய காரணம், சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது தான் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!