IPL 2026 Mini Auction: அர்ஜூன் டெண்டுல்கரை வெளியேறும் மும்பை..? வேறு வீரருக்கு அழைப்பு..! யார் இந்த ஆல்ரவுண்டர்?
TV9 Tamil News November 13, 2025 09:48 PM

ஐபிஎல் 2026க்கான மினி ஏலம் (IPL 2026 Mini Auction) வருகின்ற 2025 டிசம்பர் மாதம் 15 அல்லது 16ம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்பு, வீரர்களை தக்கவைத்துக்கொள்வது மற்றும் விடுவிப்பது குறித்து வருகின்ற 2025 நவம்பர் 15ம் தேதிக்குள் ஐபிஎல் 2026ல் பங்கேற்கும் பத்து அணிகளும் பட்டியலை வெளியிட வேண்டும். பல நாட்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ராஜஸ்தான் அணி தங்களது கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஈடாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஈடாகரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) மற்றும் சாம் கர்ரனை கேட்டு வருகிறது. இதற்கிடையில், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அர்ஜூன் டெண்டுல்கர்கள் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு செல்ல இருப்பதாகவும், ஷர்துல் தாக்கூர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ:இந்தியாவில் இல்லை.. ஐபிஎல் 2026 மினி ஏலம் இங்குதான்.. சூப்பர் அப்டேட் கொடுத்த பிசிசிஐ!

மும்பை அணியிலிருந்து வெளியேறுகிறாரா அர்ஜூன் டெண்டுல்கர்..?

🚨 PEAK IPL TRADE TIME. 🚨

– Arjun Tendulkar could join LSG with Shardul Thakur getting trade to Mumbai Indians. (Cricbuzz). pic.twitter.com/ntNrOOhT81

— Mufaddal Vohra (@mufaddal_vohra)


ஐபிஎல் 2026க்காக மும்பை மற்றும் லக்னோ அணிகள் அர்ஜூன் டெண்டுல்கர் மற்றும் ஷர்துல் தாக்கூர் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற. இந்த ஒப்பந்தம் சற்று வித்தியாசமாக இருந்தாலும், இதுதான் உண்மை. வேகப்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர்களான அர்ஜூன் டெண்டுல்கர் மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் உரிமையாளர்களை மாற்ற வாய்ப்புள்ளதாக ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரு அணிகளுக்கும் இடையே ஒரு இலவச பரிமாற்றம் நடைபெறலாம். இந்தியன் பிரீமியர் லீக் வர்த்தக விதிகளின்படி, எந்தவொரு மாற்றத்தையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

இருப்பினும், மும்பை கிரிக்கெட் வட்டாரங்கள் இந்த வீரர்கள் பரிமாற்றம் சாத்தியம் குறித்து கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளன. அடுத்த சில நாட்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம். தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வருகின்ற 2025 நவம்பர் 15ம் தேதி வெளியிடப்பட வேண்டும். கடந்த 2023 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் அறிமுகமானார். இதுவரை அர்ஜூன் 5 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகள் மற்றும் 13 ரன்கள் எடுத்துள்ளார். 2 ஏலங்களில் மும்பை அணி அர்ஜூன் டெண்டுல்கரை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு வாங்கியது. கடந்த 2025 ஐபிஎல் சீசனில் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தாலும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

ALSO READ: ராஜஸ்தான் அணிக்கு ரவீந்திர ஜடேஜா நிபந்தனை.. கேப்டன் பதவியை வழங்குமா நிர்வாகம்..?

34 வயதான ஷர்துல் தாக்கூர் ஜெட்டாவில் நடந்த 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் விற்கப்படவில்லை. லக்னோ அணியில் இடம்பெற்றிருந்த மொஹ்சின் கானுக்கு பதிலாக ரூ.2 கோடி அடிப்படையில் ஷர்துல் தாக்கூர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.ஷர்துல் தாக்கூர் லக்னோ அணிக்காக இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளையும், 18 ரன்களையும் எடுத்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.