விஜய் அரசியலில் முழு மூச்சாக இறங்கிய பிறகு அவரை சுற்றி மீம்ஸ்களும் வர தொடங்கிவிட்டன. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று சொல்வதை போல் எப்படியெல்லாமோ அவரை சுற்றி கிண்டலும் கேலியுமாக மீம்ஸ்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. இதெல்லாம் தெரியாமலா விஜய் அரசியலுக்கு வந்திருப்பார்? எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று துணிந்தே இறங்கியுள்ளார்.
அவரது அரசியல் வேகம் கரூர் சம்பவத்திற்கு பிறகு வேகமெடுத்திருக்கிறது. நேற்று தேர்தல் ஆணையத்தில் தங்களுக்கு 10 சின்னம் கேட்டு மனு ஒன்றை கொடுத்திருக்கின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி காத்திருக்கும் விஜய் தன்னுடைய அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தை வெகு சீக்கிரமாக ஆரம்பித்துவிடுவார். கடந்த ஒரு மாதமாகவே முடங்கி கிடந்த தவெக கட்சி இன்று மீண்டும் பழைய நிலைக்கு வந்திருக்கிறது.
ஆனால் விஜய் வரலாற்றில் கரூர் சம்பவம் ஒரு எழுதப்பட்ட கல்வெட்டு போல என்றைக்குமே இருக்கும். இந்த நிலையில் இன்று விஜயை கிண்டல் செய்யும் விதமாக ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அதாவது பிக்பாஸில் அதகளம் செய்யும் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரின் முகத்துக்கு பதிலாக விஜயின் முகத்தை மார்ஃபிங் செய்து அந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்.
பிக்பாஸ் வீட்டில் எப்போதுமே வாட்டர்மெலன் திவாகர் கத்திக் கொண்டேதான் இருப்பார். ஒரு கட்டத்தில் கேமிராவே முகத்தை திருப்பிக் கொள்ளும். அதே போல் எந்த மேடையேறினாலும் விஜய் உரக்க சொல்வது என்னவெனில், இரு கட்சிகளுக்கிடையில்தான் போட்டியே. ஒன்னு TVK இன்னொன்னு DMK என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார். அதை அப்படியே பிக்பாஸில் நடந்த சில சம்பவத்தை அடிப்படையாக வைத்து விஜயுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்திருக்கின்றனர்.