ஒரு கவுன்சிலர் கூட இல்லாத நீங்க திமுகவுக்கு போட்டியா?பணத்தை வைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைக்காதீங்க! விஜயை விளாசிய நயினார் நாகேந்திரன்!
Seithipunal Tamil November 13, 2025 05:48 PM

தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,தவெக மற்றும் அதன் தலைவர் விஜயை நேரடியாக குறிவைத்து கடுமையாகப் பேசியுள்ளார்.

கூட்டணியை நிராகரித்த தவெகவின் சமீபத்திய நிலைப்பாட்டை எதிர்த்து,அவர் கூறிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

தவெகவில் ஒரு கவுன்சிலர் கூட இல்லாத நிலைமை.அப்படியிருந்தும், தங்களுக்கும் திமுகவுக்கும் நேரடி போட்டி என தவெக கூறுவது “விந்தையிலும் விந்தை” என நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.

ஆதவ் அர்ஜுனாவை நேரடியாக குறிவைத்து,“பணத்தை வைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்று அவர் நினைக்கிறார்”
என்று குற்றம் சாட்டினார்.யார் வேண்டுமானாலும் கூட்டத்தை கூட்ட முடியும்;ஆனால் தேர்தலில் அந்த கூட்டத்தை வாக்காக மாற்றுவது தான் முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கரூர் சம்பவத்தின் போது பாஜக விஜய்க்கு ஆதரவாக பேசியது குறித்து விளக்கமளித்த நயினார் நாகேந்திரன்,“நாம் எந்த தனிநபரின் மீதான தாக்குதலையும் ஆதரிக்க மாட்டோம்.அது விஜயோ, யாராயினும் சரி,” என்றார்.இதற்கு ஆதரவாகவே அந்த நேரத்தில் அவர்கள் பேசியதாகவும் அவர் கூறினார்.

பாஜக வலிமையை நினைவுபடுத்திய அவர்,“உலகிலேயே மிகப்பெரிய கட்சி பாஜக. 300க்கும் மேற்பட்ட எம்பிக்கள், 1200க்கும் மேலான எம்எல்ஏக்கள் எங்களிடம் உள்ளனர்.பாஜகம் கொள்கை ரீதியாக மட்டுமே எதிர்க்கும் கட்சி”என்றார்.

தவெக அதிமுக கூட்டணியில் இணையாத முடிவு எடுத்ததற்குப் பிறகு,அதிமுக தலைவர்கள் தொடர்ந்து விஜயை விமர்சித்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது பாஜக தலைவரான நயினார் நாகேந்திரனும் இணைந்துள்ளார்.

2026 தேர்தலை முன் கொண்டு,விஜய்–தவெகவும், அதிமுக–பாஜக அணியும் இடையேஅரசியல் பதற்றம் அதிகரித்து வருவதை நயினார் நாகேந்திரனின் கருத்துகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.