திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, காதலித்து திருமணம் செய்துக் கொண்ட தம்பதியருக்கிடையே திருமணமாகி ரெண்டே வாரத்தில் ஏற்பட்ட கடுமையான தகராறு துயரமான முடிவிற்கு தள்ளியது. காதல் திருமணம் என்ற போதும், மது போதையும் சந்தேகமும் சேர்ந்த வாழ்க்கையாக அமைந்த காரணமாக ஏற்பட்ட தகராறின் போது, மனைவி கண்முன்னே தீக்குளித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூலனூர் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த பானுப்பிரியா (29), முன்னதாக திருமணம் ஆனவர். கணவர் மறைந்த நிலையில், அவர் தனது 7 வயது மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார். மூலனூரிலுள்ள கொரியர் நிறுவனத்தில் வேலை செய்துவரும் அவர், திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பாளையம் அடிவாரத்தைச் சேர்ந்த கௌதம் (31) என்பவரை காதலித்து வந்தார். கௌதம், மூலனூரிலுள்ள காத்தாடி உற்பத்தி செய்யும் ஸ்ப்ரிங் எனர்ஜி நிறுவனத்தின் ஒப்பந்த அடிப்படையிலான அக்ஷயா துணை நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி வந்தார்.
காதலித்து வந்த இருவரும் இந்த மாதம் 3ஆம் தேதி ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குழந்தை வேலப்பர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகு பானுப்பிரியா செல்போனில் அதிகமாக பேசுவது பிடிக்காமல், “செல்போன் மாற்றி விடு” என கௌதம் அடிக்கடி கூறி வந்ததாக தெரிகிறது. மேலும், மது அருந்தும் பழக்கமுள்ள கௌதம் தினமும் போதையில் மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை மது போதையில் பானுப்பிரியா வீட்டிற்கு வந்த கௌதம், “இனி சண்டை போட மாட்டேன், சேர்ந்து வாழ்வோம்” என சமரசம் முயன்றுள்ளார். ஆனால், “திருமணமான பின் நம்பிக்கையில்லா சந்தேகத்துடன் பேசுகிறாய்; மது குடிப்பதை நிறுத்துவேன் என்ற வாக்குறுதியும் காப்பாற்றவில்லை” என பானுப்பிரியா கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் உண்டான கோபத்தில், கௌதம் தன்னிடம் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி, தீப்பெட்டி உரசி தன்னைத் தீக்குளித்துக் கொண்டார். தீப்பற்றி தவித்த அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், வழங்கப்பட்ட சிகிச்சை பலிக்காமல் அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மூலனூர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் விவேகானந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தாராபுரம் பகுதியில் இந்த நிகழ்வு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!