உலக வங்கி நிதியை திசை திருப்பி பெற்ற வெற்றி. NDA குறித்து ஜன் சுராஜ் குற்றச்சாட்டு
Webdunia Tamil November 17, 2025 04:48 AM

பிகார் சட்டமன்ற தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற வெற்றி, உலக வங்கி நிதியை பயன்படுத்தி வாங்கப்பட்டது என்று பிரஷாந்த் கிஷோரின் 'ஜன் சுராஜ்' கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

தேர்தலுக்கு சற்று முன், நிதிஷ் குமார் அரசு 'முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தின்' கீழ், 1.25 கோடி பெண் வாக்காளர்களுக்குத் தலா ரூ.10,000 ரொக்க பரிமாற்றம் செய்தது. இந்த செலவுக்காக, திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் ரூ.14,000 கோடி உலக வங்கி நிதி திசை திருப்பப்பட்டதாக ஜன் சுராஜ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

உலக வங்கி அளித்த ரூ.21,000 கோடியிலிருந்து இந்த தொகை வழங்கப்பட்டதாக கூறி, மாநிலக் கடன் ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ள நிலையில், "அரசு கருவூலம் காலியாகிவிட்டது" என்று ஜன் சுராஜ் கட்சி எச்சரித்துள்ளது.

இந்த தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாத நிலையில், NDA கூட்டணி 202 இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.