பொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு மருந்து மாத்திரை தேவையில்லாமல் செய்யும் ,அந்த வகையில் ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு ஆரோக்கியம் உண்டு .இந்த பதிவில் வல்லாரை கீரையில் உள்ள ஆரோக்கிய குணம் பற்றி பார்க்கலாம்
1.முதலில் வல்லாரைக்கீரை - ஒரு கப் எடுத்து கொள்வோம்
2.அடுத்து இந்த கீரையுடன் பூண்டு - 2 பல் எடுத்து கொள்வோம்
3.அடுத்து கீரை மற்றும் பூண்டுடன் தேங்காய் துருவல் - கால் கப் எடுத்து கொள்வோம்
4.அடுத்து காய்ந்த மிளகாய் - 5 எடுத்து கொள்வோம்
5.அடுத்து எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்,எண்ணெய் மற்றும் உப்பு எடுத்து கொள்வோம்
6.இப்போது மூளைக்கு சக்த்தி தரும் வல்லாரை கீரை செய்முறை பற்றி பார்க்கலாம்
7.முதலில் வல்லாரை கீரையை சுத்தம் செய்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
8.பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் வல்லாரைக்கீரை, பூண்டு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி கொள்வோம்
9.அடுத்து வதக்கி எடுத்த கலவையுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்வோம்
10.இறுதியாக அரைத்த விழுதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து எடுத்தால். சுவையான வல்லாரை துவையல் ரெடி!இதை சாப்பிட ஆரோக்க்கியமும் ரெடி