விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
SIR வாக்காளர் சிறப்பு சீர்திருத்தத்தை கண்டித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழக முழுவதுமே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனொரு பகுதியாக மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல்குமார், “பாஜகவுடன் கூட்டணியில் உள்ள எந்த கட்சியுடனும் தவெக கூட்டணி இல்லை. பாஜகவுடன் கூட்டணி வைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை. கூட்டணி குறித்து ராகுல்காந்தி விஜய் உடன் பேசினார் என்பது புரளி. அதுபோன்று இருந்தால் பொதுவெளியில் தெரிவிக்கப்படும். அதேபோல் கூட்டணி பேச்சு நடந்தால் பொதுவெளியில் தெரிவிப்போம்” என்றார்.