தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உட்பட 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 மாவட்டங்களுக்கு விரைந்து பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இன்று கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், அவசரகாலங்களில் உடனடியாக பேரிடர் மேலாண்மைத் துறைக்குத் தகவல் தெரிவிக்கவும் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது. பேரிடர் மீட்புக் குழுக்களும் இந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கனமழையை எதிர்கொள்ளும் வகையில், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசரத் தகவல்கள் மற்றும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியர்கள் பேரிடர் மேலாண்மைத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். பேரிடர் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தமிழ்நாடு மீட்புப் படையினர் அடங்கிய குழுக்கள் 10 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பேரிடர் மேலாண்மைத் துறை, அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அவர்கள் மூலம் முறையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்று பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!