எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை அதிகம்.. உயிரை மாய்த்துக் கொண்ட பி.எல்.ஓ.. பெரும் அதிர்ச்சி..!
WEBDUNIA TAMIL November 17, 2025 02:48 PM

தமிழகம், கேரளா உள்பட சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக சிறப்பு திருத்த பணி நடைபெற்று வருகிறது. வீடு வீடாக சென்று வாக்காளர்களின் உண்மை நிலையை கணக்கெடுக்கவும், போலியான வாக்காளர்களை நீக்கவும் பி.எல்.ஓ அதிகாரிக்ள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கேரளா மாநிலம் கண்ணூரில் பி.எல்.ஓ-வாக பணியாற்றி வந்த அனீஸ் ஜார்ஜ் என்பவர் தனது உயிரை மாய்த்து கொண்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தலுக்கான எஸ்.எஸ்.ஆர். பணியின் அழுத்தம் தான் அவரது மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.