இந்திய சினிமாவில் மிக பிரம்மாண்ட இயக்குனராக தற்போது வலம் வருபவர் இயக்குனர் ராஜமௌலி. இவருடைய இயக்கத்தில் வெளியான பாகுபலி ஒன்று மற்றும் இரண்டு பாகங்கள் உலக அளவில் ஆயிரம் கோடியை வசூலித்து இந்திய திரை துறைக்கே பெருமையை சேர்த்தது. அந்தப் படத்திற்கு அடுத்ததாக மீண்டும் அவர் இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்றது.
அது மட்டுமல்ல பாக்ஸ் ஆபிஸில் 800 கோடிக்கும் அதிகமாக வசூலை சம்பாதித்தது. இப்படி அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த ராஜமவுலி அடுத்து யாரை இயக்கப் போகிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பு அனைவர் மத்தியில் இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் அஜித்தின் பெயரும் அடிபட்டது. ஆனால் ராஜமவுலி அடுத்ததாக மகேஷ் பாபுவுடன் இணையப் போகிறார் என்ற ஒரு செய்தி வெளியாகி தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில்தான் ராஜமௌலி மற்றும் மகேஷ்பாபு இணையும் படத்தின் டீசர் வெளியீட்டு விழா தான் ஹைதராபாத்தில் நடந்தது. வாரணாசி என பெயரிடப்பட்டுள்ள அந்த படம் 2027 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என கூறப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் பிரித்விராஜ் மெயின் வில்லனாக நடிக்கிறார். படத்தின் நாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். இந்த படத்திற்காக பிரியங்கா சோப்ராவிற்கு 30 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த சம்பளத் தொகையின் மூலம் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற சாதனையை படைத்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் தெலுங்கு சினிமாவிற்கு ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யப் போவதாக ராஜமவுலி கூறியிருந்தார். படத்தில் ருத்ரா என்ற கேரக்டரில் மகேஷ் பாபு நடிக்கிறார்.

அதனால் இந்த டீசரில் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு காளையில் அமர்ந்து மகேஷ் பாபு வருவது போல வடிவமைத்திருந்தார்கள். அது கூட மீம்ஸ் மெட்டீரியலாக மாறியது. ஏனெனில் மாடு மட்டும் பொம்மையா? இல்லை மகேஷ் பாபுவும் பொம்மையா என்று நக்கல் அடித்தனர். இந்த நிலையில் மாட்டின் மேல் மகேஷ் பாபு அமர்ந்து வருவது போல இதை ஏற்கனவே கமல் படத்தில் காண்பித்து விட்டார். மருதநாயகம் படத்தில் காளை மாட்டில் ஓடி வந்து கமல் ஏறி உட்கார்ந்து சவாரி செய்வது போல ஒரு காட்சி இருக்கும். ராஜமவுலி வாரணாசியில் பண்ணுவதற்கு முன்பே நிஜத்தில் கமல் அதை மருதநாயகம் படத்தில் காண்பித்து விட்டார். ராஜமவுலிக்கு முன்னோடி கமல் என்று நெட்டிஷன்கள் கூறி வருகின்றனர்.