வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் அரசுக்கு எதிராக நடந்த மாணவர் போராட்டங்களின்போது நிகழ்ந்த வன்முறைகள் தொடர்பான வழக்கில் குற்றவாளி என வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்கியது.
கடந்த ஆண்டு போராட்டங்களில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஷேக் ஹசீனா மீது வழக்குத் தொடரப்பட்டது.
ஷேக் ஹசீனா "மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை" செய்ததாகவும், சொந்த நாட்டு குடிமக்களை கொல்ல உத்தரவிட்டதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். மேலும், அவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர் போராட்டங்களால் பிரதமர் பதவியை இழந்த ஷேக் ஹசீனா, பதவியில் இருந்து விலகி ஒரு வருடத்திற்கும் மேலாக இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். அவருக்கு பிறகு, முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இந்த தீர்ப்பை ஒட்டி வங்கதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva