திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள பெருமாநல்லூர் பகுதியில் இன்று அதிகாலை கோர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. பெங்களூருவில் இருந்து கேரளாவில் உள்ள சபரிமலைக்குச் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த ஆம்னி பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர்.
இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டுச் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.