ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற குளோப் ட்ராட்டர் நிகழ்வில், மகேஷ் பாபு–ராஜமௌலி கூட்டணியில் உருவாகும் ‘வாரணாசி’ படத்துக்கான புது அப்டேட்கள் வெளியானது. இதில் கலந்து கொண்ட நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், ராஜமௌலி கூறிய கதையை கேட்ட அனுபவத்தை பகிர்ந்த போது ரசிகர்கள் ஆவலுடன் கவனித்தனர்.
“ராஜமௌலி சாரிடமிருந்து மெசேஜ் வந்ததும் அலுவலகம் சென்றேன். கதை சொல்ல ஆரம்பித்த 5 நிமிடங்களிலேயே அதிர்ச்சி! இவ்வளவு பெரிய விஷன், இப்படி ஒரு கற்பனை… அது எங்கிருந்து வருகிறது?” என்று பிருத்விராஜ் வியப்புடன் கூறினார்.
மேலும் அவர் குறிப்பிட்டது:“ராஜமௌலி படப்பிடிப்பு கடினமானது. ஆனால் அந்தக் கடினத்தன்மையே படத்தின் பெருமையை நிரூபிக்கும். அவரின் நம்பிக்கையைப் பெறுவது எனக்குப் பெரிய மரியாதை.”
இந்த நிகழ்வில் கீரவாணி இசையமைத்த ‘கும்ப’ எனும் சிறப்பு பாடலும் வெளியிடப்பட்டது. பிருத்விராஜ் நடித்திருக்கும் பயங்கர வில்லன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட இந்த பாடல், ரசிகர்களிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது.
நிகழ்வில் மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ராவும் கலந்து கொண்டனர். “இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட்டில் பங்கேற்பது மகிழ்ச்சி” என பிரியங்கா தெரிவித்தார்.அதே நேரத்தில், பிருத்விராஜ், மகேஷ் பாபுவிடம், “நான் தியேட்டரில் பார்த்த முதல் தெலுங்குப் படம் ‘போக்கிரி’. இந்த படம் உங்கள் கேரியரில் மைல்கல்லாக இருக்கும்” என்றும் கூறியுள்ளார்.