பாட்னா, நவம்பர் 17 : சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் (Bihar Assembly Election) பாரதிய ஜனதா கட்சி கூட்டணி (Bharatiya Janata Party Alliance) சுமார் 202 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் (Bihar Chief Minister Nithish Kumar) நவம்பர் 20, 2025 அன்று பதவி ஏற்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பீகாரில் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பீகாரில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்பீகாரில் நவம்பர் 6, 2025 மற்றும் நவம்பர் 11, 2025 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு கட்ட வாக்குபதிவுகளின் எண்ணிக்கை நவம்பர் 14, 2025 அன்று எண்ணப்பட்டது. இந்த வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதன் மூலம் பாஜக கூட்டணி பீகாரில் மீண்டும் தனது ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க : 100 முறை தோப்புக்கரணம் போட்டதால் பள்ளி மாணவி பலி?.. அதிர்ச்சி சம்பவம்!
நவம்பர் 20-ல் முதல்வராக பதவி ஏற்கும் நிதிஷ் குமார்பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமாரை அறிவிக்க பாஜக தயக்கம் காட்டி வந்த நிலையில், பிறகு அவரையே முதலமைச்சராக அறிவித்தது. நிதிஷ் குமார் பீகார் முதலமைச்சராக நவம்பர் 19, 2025 அல்லது நவம்பர் 20, 2025 அன்று பதவி ஏற்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், நவம்பர் 20, 2025 அன்று நிதிஷ் குமார் மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்கம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு – அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
இன்று பதவி விலகும் நிதிஷ் குமார்#WATCH | Bihar Chief Minister Nitish Kumar leaves from Raj Bhavan; reaches his residence in Patna
NDA registered a landslide victory in the recently concluded #BiharElection2025, winning 202 of the 243 seats in the state. pic.twitter.com/cB7yaIYypj
— ANI (@ANI)
நிதிஷ் குமார் இன்று (நவம்பர் 17, 2025) மந்திரி சபை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதில் 17வது சட்டசமையை கலைக்க ஒப்புதல் அளிக்கப்படும் என்று அந்த தீர்மானம் நிறைவேறியதும் நிதிஷ் குமார் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார் எனவும் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நிதிஷ்குமார் ஆளுநரை சந்தித்துள்ளார்.
பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் பதவி ஏற்பு விழாநவம்பர் 20, 2025 அன்று நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவில் நிதிஷ் குமார் 10வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.