தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்சு அலர்ட் மற்றும் மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இன்று காலை 10 மணி வரைதமிழ்நாட்டில் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இங்கே இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்.
மழை வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த வாரம் முழுவதும் மழை?
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இங்கே இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
ராணிப்பேட்டை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யலாம். இந்த மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் விடுமுறை?காரைக்காலில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டிணத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியூரில் வேலை; SIR படிவம் வீட்டிற்கு வந்துவிட்டது! என்னுடைய கையெழுத்து தேவையா? | Q&A