பீகார் தேர்தல்! வாக்கு சுருட்டலா...? காங்கிரஸ் தலைவர் சுட்டுக்காட்டிய அதிரடி உண்மைகள்!
Seithipunal Tamil November 17, 2025 10:48 AM

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட குறிப்பில் அவர் தெரிவித்திருப்பதாவது,"பீகார் தேர்தல் முடிவை காரணம் காட்டி, தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்ற அபத்தமான கணிப்புகளை சிலர் பரப்ப தொடங்கியுள்ளனர். பீகாரில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற ‘சிறப்பு தீவிர திருத்தம்’ மூலம் 65 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதை எதிர்த்து, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவும் இணைந்து 16 நாட்கள் வாகனப் பேரணி மூலம் மக்களிடம் நேரடி பிரச்சாரம் செய்தனர்.

இதையடுத்து, இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டு, வெற்றி வாய்ப்புகள் இந்தியா கூட்டணிக்கே அதிகம் என நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்யும் விதமாக பாஜக-கூட்டணி வென்றது.கடந்த 20 ஆண்டுகளாக பீகார் முதலமைச்சராக உள்ள நிதிஷ்குமார் தொடர்ச்சியாக மீண்டும் வெல்வதற்கு வலுவான காரணமே இல்லாத நிலையில், இந்த எதிர்பாராத வெற்றியை எப்படி விளக்குவது என்று அரசியல் வல்லுநர்கள் ஆழ்ந்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
பீகாரின் உண்மை நிலையைப் பார்க்கும்போது
மக்களின் 33.78% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்
54% குடும்பங்கள் மாதம் ரூ.10,000-க்கும் குறைவாக வருமானம் பெறுகின்றன
இந்தியாவின் மிக உயர்ந்த வேலையின்மை விகிதமான 10.8% பீகாரிலே உள்ளது
வேலை தேடி ஏறத்தாழ 3 கோடி மக்கள் புலம் பெயர்ந்து தென் மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்
இந்நிலையில், பாஜக கூட்டணிக்கு “பெரும்பான்மை ஆதரவு” கிடைத்ததற்கு ஏதுவான நியாயமான காரணம் எதுவும் இல்லை என அவர் வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறியதாவது,"2023 ஆம் ஆண்டு புதிய ஒழுங்கு படி இந்திய தலைமை நீதிபதியை ‘தேர்தல் ஆணையர் தேர்வு குழு’யிலிருந்து நீக்கி, பிரதமர்–மத்திய அமைச்சர்–எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரே தேர்வு குழுவாக அமைந்த நாளிலிருந்தே தேர்தல் ஆணையம் மோடி–அமித்ஷா கூட்டணியின் கட்டுப்பாட்டினுள் சென்று விட்டது.இதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிரா, அரியானா போன்ற மாநிலங்களில் நிகழ்ந்த ‘வாக்குத் திருட்டு யுக்தி’ பீகாரிலும் அப்படியே நடந்ததாக உறுதியான சந்தேகங்கள் எழுகின்றன.தேர்தல் நேர்மை குறித்து அவர் முக்கிய குற்றச்சாட்டையும் முன்வைத்தார்."தேர்தல் விதிமுறைகள் அமலிலிருந்த செப்டம்பர் மாதத்தில் பீகாரில் 1.21 கோடி பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட்டது. இதை ஒரு வெளிப்படையான “லஞ்சப் போக்குவரத்து” எனக் குறிப்பிட்டார். இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் மறுத்தது; ஆனால் தெலுங்கானா, ஜார்கண்ட் மாநிலங்களில் இதே திட்டத்தை தடுப்பது கேள்விகுறியாக உள்ளது.மேலும், வாக்கு விகிதம் – இடம் விகிதம் இடையே பெரிய முரண்பாடும் பீகார் தேர்தலின் நம்பகத்தன்மையை சந்தேகத்திற்கு உட்படுத்துகிறது:
RJD – 23% வாக்கு → 25 இடங்கள்
BJP – 20.6% வாக்கு → 89 இடங்கள்
JDU – 20.3% வாக்கு → 85 இடங்கள்
இத்தகைய உச்ச முரண்பாடுகள் “சதி, சூழ்ச்சி மற்றும் தேர்தல் தலையீடு” ஆகியவற்றை உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.தமிழகத்தைப் பொறுத்தவரை,
தி.மு.க தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2019, 2021, 2024 தேர்தல்களில் உறுதியான வெற்றிகளைப் பெற்று, மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.மத்திய பாஜக அரசின் தமிழ்நாடு விரோத அணுகுமுறைக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக இந்தியா கூட்டணியின் பின்னால் நின்று வருகின்றனர். அடுத்த 2026 சட்டமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணியின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என அவர் வலியுறுத்தினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.