தமிழகம் முழுவதும் இன்று டெட் 2ம் தாள் ஆசிரியர் தகுதித் தேர்வு.. இவற்றுக்கு எல்லாம் அனுமதியில்லை!
Dinamaalai November 17, 2025 04:48 AM

தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புவோருக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான தாள்–1 தேர்வு நேற்று நடைபெற்ற நிலையில், 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு தேவையான தாள்–2 தேர்வு இன்று (ஞாயிறு) 1,241 மையங்களில் நடைபெறுகிறது.

தேர்வு விவரங்கள்:

முதலாம் தாள் தேர்வுக்கு மாநிலம் முழுவதும் 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை தேர்வாளர்கள் மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். அதற்குப் பிறகு வந்தவர்கள் தேர்வு அறைக்குள் செல்ல விடப்படவில்லை. நுழைவு சீட்டு மற்றும் அடையாள அட்டை வைத்திருந்தவர்களே தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற தாள்–1 தேர்வை 92,412 பேர் எழுதியதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 14,958 பேர் தேர்வுக்கு வராமல் தவறியுள்ளனர்.

தேர்வு பாதுகாப்பு:

முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படையினர் சுற்றிப் பார்வையிட்டனர். மேலும், பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் ஒவ்வொரு மையத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தாள்-2 தேர்வுக்கு 3,73,438 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாநிலம் முழுவதும் நடைபெறும் இந்த தேர்வுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

தேர்வில் தகுதி பெறுபவர்களுக்கு மட்டுமே எதிர்காலத்தில் ஆசிரியர் பணியாற்ற தகுதி கிடைக்கும் என்பதால், ஆயிரக்கணக்கான தேர்வர்கள் இந்தத் தேர்வில் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.