ஐ.நா. பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தால், பாலஸ்தீனத்தின் மூத்த அதிகாரிகள் அனைவரையும் குறிவைத்து ஒழிக்க வேண்டும் என இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென்-க்விர் கூறியுள்ளார். இஸ்ரேலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசிய இந்த கருத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாலஸ்தீன் தலைவர்கள் பயங்கரவாதிகள் என்றும், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், ஐ.நா. தனிநாடு அந்தஸ்து வழங்கினால் பாலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸையும் கைது செய்து தனிச்சிறையில் அடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது சர்ச்சையை அதிகரித்துள்ளது.
இந்த கருத்துக்கு பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பென்-க்விரின் பேச்சுக்கு இஸ்ரேல் அரசே பொறுப்பு எனவும், இது சர்வதேச சட்டத்திற்கும் மனித உரிமைக்கும் எதிரானது எனவும் பாலஸ்தீன் குற்றம்சாட்டியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!