அம்பேத்கர் சிலை எங்க அடையாளம்... கை வைத்தால் வடசென்னையே பொங்கி எழும்- நடிகர் தீனா ஆவேசம்
Top Tamil News November 19, 2025 05:48 AM

சென்னை திருவொற்றியூரில் சுங்கச்சாவடி பேருந்து நிலையம் அருகே 35 ஆண்டுகள் பழமையான அம்பேத்கர் சிலை அம்பேத்கர் மக்கள் இயக்கங்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. திருவொற்றியூர் எல்லைக்கு அடையாளமான அம்பேத்கர் சிலைக்கு அனைத்துக் கட்சியினரும் ஆண்டுதோறும் அம்பேத்கர்  பிறந்த நாள் நினைவு நாள் போராட்டங்கள் என ஒன்று கூடி சிலையின் முன்பு அன்னதானங்கள் நல்ல திட்டங்கள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் அம்பேத்கர் சிலையின் பின்புறம் எவரடி கம்பெனி என்னடம் தனியார் நிறுவனத்திடம்  விற்பனை செய்யப்பட்டு அங்கு கடைகள், குடியிருப்புகள் கட்டுவதற்காக பிளாட்கள் அமைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.சுவரை ஒட்டிய அம்பேத்கார்  சிலை இருப்பதினால் அம்பேத்கர் சிலையை பாதுகாப்பதற்கு அம்பேத்கர் மக்கள் கூட்டமைப்பினர் சிலைக்கு பாதுகாப்பாக கட்டிடங்களை எழுப்பினர். ஆனால் அதற்கு ஆட்சேபம் தெரிவித்த தனியார் நிர்வாகம் அம்பேத்கர் சிலையை பராமரிக்கக் கூடாது என புகார் அளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அம்பேத்கர் மக்கள் கூட்டமைப்பினர் மற்றும் நடிகர் தீனா  சிலையின் முன்பு ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.


பின்னர் காவல் துறையினர் தலையிட்டு நாளை சுமுகமாக தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். இதனால் சமரசமாகி கலைந்து சென்றனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய நடிகர் தீனா, “நெடுஞ்சாலைத்துறை காவல்துறை என அனுமதி பெற்று 35 ஆண்டுகளாக பராமரித்து வரும் அம்பேத்கர் சிலையை நேற்று வந்த முதலாளிகள் அகற்ற நினைப்பது கண்டனத்திற்குரியது  ஒண்ட வந்த பிடாரியை ஊர் பிடாரி ஓட்டுவது போன்று தனியார் நிறுவனம் செயல்படுகிறது சொந்த மண்ணில் அடிமையாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.  எங்களுக்கெல்லாம் வழிகாட்டியான அம்பேத்கர் சிலையை அகற்ற நினைத்தால் வடசென்னை மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்” என எச்சரிக்கை செய்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.