கனமழை காரணமாக விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
நேற்று இரவு முதல் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாகப் புதுச்சேரி கல்வி அமைச்சர் நமசிவாயம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கரூர், தஞ்சாவூர், திருவள்ளூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் மிதமான மழை இடி மின்னலுடன் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Siva