தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் ஆன்லைன் கட்டண முறையில் கிரெடிட் கார்டுகளை (Credit Card) பயன்படுத்தி தங்களது பில் கட்டணங்களை செலுத்துகின்றனர். கிரெடிட் கார்டில் மாத தவணை (EMI – Every Month Installment) வசதி, கிரெடிட் பாயிண்ட்ஸ் (Credit Points) ஆகிய அம்சங்கள் உள்ளதால் அதனை பலரும் மிக அதிகமாக பயன்படுத்துகின்றனர். கிரெடிட் கார்டு ஏராளமான மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் நிலையில், உண்மையில் அது பயனுள்ளதா?, அதில் மறைந்திருக்கும் சிக்கல்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கிரெடிட் கார்டு மாத தவணை என்றால் என்ன?ஏதேனும் ஒரு பொருளை வாங்கும்போது அதற்கான பணத்தை மொத்தமாக செலுத்தாமல் மாதம் மாதம் பிரித்து சிறிய அளவிலான தொகையை செலுத்த இந்த கிரெடிட் கார்டு மாத தவணை முறை உதவி செய்கிறது. பொதுவாக கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கப்படும் பொருட்களுக்கான பணத்தை திருப்பி செலுத்த மூன்று முதல் 24 மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த முறை நீங்கள் அதிக நிதி சுமையை ஒரே நேரத்தில் எதிர்க்கொள்ளாத வகையில் பாதுகாக்க உதவும். ஆனால், இதில் வட்டி (Interest Rate) மற்றும் பிராசசிங் கட்டணம் (Processing Fees) உள்ளிட்டவை அடங்கும்.
இதையும் படிங்க : பிள்ளைகளின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய பெற்றோர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 3 முக்கிய திட்டங்கள்!
கிரெடிட் கார்டு மாத தவணை முறை எப்படி செயல்படுகிறது?நீங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏதேனும் ஒரு பொருளை வாங்கும் பட்சத்தில் அதற்கான முழு பணத்தையும் அந்த வங்கி செலுத்திவிடும். பிறகு நீங்கள் மாதம் மாதம் செலுத்தும் பணத்தில் இருந்து அதனை பிடித்துக்கொள்ளும். ரூ.3,000 முதல் ரூ.5,000 வரையிலான கிரெடிட் கார்டு பில்லுக்கு மாத தவணை முறை பொருந்தும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்தும் பட்சத்தில் அது உங்களது மொத்த இருப்பில் பிரதிபலிக்கும்.
இதையும் படிங்க : Personal Loan-ஐ மையப்படுத்தி நடைபெறும் மோசடிகள்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?
எப்போது மாத தவணை முறையை தேர்வு செய்யலாம்?நீங்கள் ஏதேனும் அதிக விலை கொண்ட பொருளை வாங்குகிறீர்கள், அதனை உங்களது மாத வருமானத்தில் பூர்த்தி செய்ய முடியாது என்கிற பட்சத்தில் கிரெடிட் கார்டு மாத தவணை முறையை தேர்வு செய்யுங்கள். குறைந்த அளவிலான தொகைக்கு கிரெடிட் கார்டு மாத தவணை தேர்வு செய்வது அதிக வட்டியை செலுத்த வழிவகுத்துவிடும். எனவே பெரிய தொகைக்கு கிரெடிட் கார்டு மாத தவணை முறையை தேர்வு செய்யும் பட்சத்தில் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.