கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்திலுள்ள பெட்டகேரி கிராமத்தில் வசித்து வரும் 8-ம் வகுப்பு மாணவன் சாய்ராம், தன்னுடைய பகுதியில் ஆட்கொள்ள முடியாத சிரமங்களை சந்தித்து வந்தான்.
பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வரும் கிராம மக்களின் நிலையை தினமும் நேரில் பார்த்து வந்த இந்த சிறுவன், ஒருநாள் பெரியவர்களுக்கே கண்விழிக்கும் ஒரு செயலை முடிவு செய்தான்.

அந்த கிராமத்தின் வடுக்களையும், குடிநீர் பற்றாக்குறையையும், மழை பெய்யும் போதெல்லாம் சாலைகள் சேறும், சகதியுமாக மாறிப் போவதையும் கவலைப்பட்ட சாய்ராம், நேராக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பினான்.அதில்,“எங்கள் பெட்டகேரி கிராமத்திற்கு வருடங்களாக சரியான சாலை வசதி இல்லை.
மழை நேரங்களில் சாலை முழுவதும் சேறு குவிந்து, பள்ளி முடிந்துவிட்டு வீடு திரும்பும் மாணவர்கள் அதில் வழுக்கி விழும் நிலை. குடிநீரும் சரியாக கிடைக்கவில்லை.
எங்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை”என்று மனமுவந்து எழுதியிருந்தான்.ஒரு சிறுவன் தான் காணும் குறைகளைக் கூறி, கிராம மக்களின் நலனுக்காக நாட்டின் பிரதமருக்கே நேரடியாக கடிதம் அனுப்பிய இந்த துணிச்சல், சமூக வலைதளங்களில் வைரலாகி, பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.