அகமதாபாத், நவம்பர் 19 : குஜராத் மாநிலத்தை (Gujarat) சேர்ந்தவர் சைலேஷ் கம்பாலா. ஒவர் பாவ் நகரில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். அவர்கள் சூரத்தில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சைலேஷின் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு கணவனை பார்க்க வந்துள்ளார். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக தங்களது விடுமுறையை கொண்டாடியுள்ளனர்.
தாயுடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவிவிடுமுறை முடித்து மீண்டும் சூரத்துக்கு திரும்ப இருந்த மனைவி மற்றும் குழந்தைகளை சைலேஷ் தனது தாயுடன் தங்கும்படி கூறியுள்ளார். ஆனால், அவரது மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். நான் உங்களிடம் பலமுறை கூறிவிட்டேன். எனக்கு உங்களது தாயுடன் வாழ விருப்பமில்லை. தனி குடித்தனத்தில் வாழ தான் பிடித்திருக்கிறது என அவர் கூறியுள்ளார். இது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்.. சதி செயலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது.. வெளியான திடுக் தகவல்
ஆத்திரத்தில் அடித்தே கொலை செய்த கணவன்இவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றிய நிலையில், கடும் ஆத்திரத்திற்கு உள்ளான சைலேஷ் மனைவியை மிக கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தனுள்ளார். இதனை அவரது குழந்தைகள் பார்த்துக்கொண்டு இருந்த நிலையில், இது குறித்து வெளியே தெரியாமல் இருக்க அவர்கள் இருவரையும் அவர் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடல்களை யாருக்கும் தெரியாமல் தனது குடியிருப்புக்கு அருகே உள்ள ஒரு காலி இடத்தில் புதைத்து வைத்துள்ளார்.
இதையும் படிங்க : டிராஃபிக் சிக்னல்கள் இல்லாத இந்தியாவின் முதல் நகரம்.. எது தெரியுமா?
மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என நாடகம்சில நாட்களுக்கு பிறகு உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து துர்நாற்றாம் வீச தொடங்கியுள்ளது. இதனால் பயந்துப்போன சைலேஷ், முன்னெச்சரிக்கையாக காவல் நிலையத்திற்கு சென்று தனது மனைவி மற்றும் பிள்ளைகளை காணவில்லை என் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சைலேஷிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
அதிரடியாக கைது செய்த போலீசார்இதற்கிடையே சைலேஷின் மனைவி மற்றும் பிள்ளைகளின் உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சைலேஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.